வகைப்படுத்தப்படாத

நல்லாட்சி இணக்க அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – மோடி

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி இணக்க அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டதாக பிரதமர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராந்திய சமாதானம், பாதுகாப்பு சுதந்திர கடற்பயணத்தை உறுதிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஒத்துழைப்புடன் செயற்படவுள்ளதாக இரண்டு நாட்டு பிரதமர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்திய இலங்கை சகோதரத்துவத்தை உரிய முறையில் முன்னெடுத்து செல்வதற்காக இலங்கை பிரதமர் முன்னெடுக்கும் செயற்பாடுகளை இந்திய பிரதமர் வரவேற்றுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய அதிக ஆவலுடன் இருப்பதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தொடர்பான உயர் கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைகழகத்தை இலங்கை ஸ்தாபிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

Related posts

ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் பலர் பலி…

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்