கேளிக்கை

ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமிக்கு அதிஷ்டம்

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் தமக்கு இருந்த உறவை மறைப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு இருந்த ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ்-க்கு வழக்கறிஞர் கட்டணச் செலவாக 44,100 டாலர் வழங்க வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

இதன் இந்திய மதிப்பு சுமார் 81 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு 11 நாட்களுக்கு முன்பு ஸ்ட்ரோமி டேனியல்ஸ் மற்றும் டிரம்ப் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த வழக்கு தொடர்பான சட்டச் செலவுகளை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் வழங்க வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிரம்ப் உடனான ஒப்பந்தத்தின்படி ஸ்ட்ரோமி மற்றும் டிரம்ப் இடையே நிகழ்ந்த பாலுறவு குறித்து, இரு தரப்பும் வெளியே பேசக்கூடாது; ஆனால், சம்பந்தப்பட்ட இருதரப்பும் இதுகுறித்து வெளியே பேசிவிட்டனர் என்பதால் வழக்கறிஞர் கட்டணச் செலவை தங்கள் தரப்பு ஆபாசப் பட நடிகைக்கு வழங்க வேண்டியதில்லை என்று டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்ட மைக்கேல் டீ கோஹன், கடந்த 2016இல் இந்த ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக, பெப்ரவரி 2018இல் அமெரிக்க ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தளத்தில் ஈரான் கலாச்சார கண்காட்சியும் திரைப்பட விழாவும்.

பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்

பிரபல இசைக்கலைஞர் காலமானார்…