சூடான செய்திகள் 1

18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(10) பல பகுதிகளில் காலை 9.00 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக எதிர்வரும்10 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் வத்தளை – மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகர சபை அதிகார பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக குறித்த சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் வத்தளை, மஹர மற்றும் ஜாஎல பிரதேச சபை அதிகார பகுதிகளுடன் கம்பஹா பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் ஒரு பகுதியிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்றைய காலநிலை…

மஹிந்தவுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்தது குறித்து விசாரணை தேவை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம்