உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும், எதிர்வரும் 09 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6  மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 09 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மாலை 04 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவல்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன நீதிமன்றில் சரண்