உள்நாடு

16ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் – கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும் (02) ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண மட்டத்திலான பாடசாலைகளையாவது ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

Related posts

மேல் மாகாணம் அதிக அபாயமுள்ள வலயமாக பிரகடனம்

உலகக் கிண்ண போட்டிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார்!

மொட்டுக்கட்சி வேட்பாளர் யார் ? 7ஆம் திகதி அறிவிப்பு வருமாம்