உள்நாடு

16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப் படை ஆகியவையுடன் இணைந்து, கொழும்பு துறைமுகம் மற்றும் ராகமவில் உள்ள பெரலந்த பகுதியில் 2025 டிசம்பர் 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது சட்டவிரோத விற்பனைக்காக தயார்நிலையில் வைத்திருந்த சுமார் பதினாறாயிரம் (16,000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கொழும்பு துறைமுகத்தில், கொழும்பு துறைமுக காவல்துறையுடன் இணைந்து, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நடத்திய நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயார்நிலையில் வைத்திருந்த சுமார் ஆயிரம் (1000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் (01) ஒரு சந்தேக நபரும், ராகம பெரலந்த பகுதியில், கோனஹேன பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையுடன் இணைந்து இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நடத்திய நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக வைத்திருந்த பதினைந்தாயிரம் (15,000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் (01) ஒரு சந்தேக நபருமாக, இவ்வாறு பதினாறாயிரம் (16,000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 54 மற்றும் 65 வயதுடைய சந்தேக நபர்கள் பெலியத்த மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களையும் வெளிநாட்டு சிகரெடுகளையும் கொழும்பு துறைமுக காவல்துறையினரிடமும் ராகம காவல் நிலையத்திடமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Related posts

சர்வகட்சி அரசுக்கு சுதந்திர கட்சி பச்சைக்கொடி

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

editor

அரசியல் பழிவாங்கலிற்குள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு