உள்நாடுபிராந்தியம்

16 வயது மாணவி பரிதாப மரணம் – யாழ்ப்பாணத்தில் சோகம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார்.

தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

-கஜிந்தன்

Related posts

சனத் நிஷாந்தவின் வீடு எரிப்பு சம்பவம் : சந்தேக நபர்கள் விடுதலை!

தொழில் திணைக்களத்தினை ஒத்த இணையத்தளம் மூலமாக மோசடி

விசிநவ பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் சம்மேளனம் அங்குரார்ப்பணம்

editor