உள்நாடுபிராந்தியம்

16 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸ் சார்ஜன்ட் கைது

திஸ்ஸமஹாராம பொலிஸில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவர் முறைப்பாடு ஒன்றை விசாரிப்பதற்காக வீடு ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர், சிறுமியின் வீட்டுக்குச் சென்று முறைப்பாடு குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் சிறுமி தங்கியிருந்த அறைக்குச் சென்று, சம்பவம் தொடர்பி் சிறுமியுடன் விசாரணைகளை மேற்கொண்டிருந்தபோதே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

Related posts

BreakingNews: டயானா கமகேவின் வழக்கு தள்ளுபடி!

இன்று முதல் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம்

தங்கல்லே சுத்தா விளக்கமறியலில்