உள்நாடுபிராந்தியம்

15 வயதுடைய இரு மாணவிகள் ஆலய கேணியில் தவறி விழுந்து உயிரிழப்பு

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கின்ற மூன்று மாணவிகள் இன்று மதியம் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு சென்றுள்ளனர். 

மூவரும் கேணியில் இருந்தபோது இருவர் நீரில் இறங்கி இருக்க மற்றவர் புகைப்படம் எடுத்துள்ளார். 

திடீரென இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் மற்றைய யுவதி அவர்களை காப்பாற்ற முயன்று அது பயனற்றுப் போக குறித்த யுவதி அயலவர்களை அழைத்து அவர்களை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கின்ற பதினைந்து வயதுடைய ச.ரஸ்மிலா மற்றும் ர.கிருசிகா ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இருவருன் சடலங்களும் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தவசீலன்

Related posts

‘முட்டாள் போராட்டத்தினால் ரணில் ஜனாதிபதியானார்’ – விமல்

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் திடீர் தீ

கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல உண்மைகளை போட்டுடைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor