சூடான செய்திகள் 1

மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)  பொத்துபிட்டி மகா வித்தியாலயத்தில் எல்லைச் சுவர் அமைப்பதற்காக குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது றக்குவானை, பொத்துபிட்டி பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

 

Related posts

அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் இல்லை

“புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் நோர்டிக் (NORDIC) நாடுகளின் மாதிரியைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!

புலமைப் பரிசை மாணவர்களுக்கு வழங்குவதில் மாற்றம்