கிசு கிசு

1400 பயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவித்த கப்பல்…

நோர்வேயில் புயல் தாக்கியதில் இயந்திரம் பழுதாகி கடலில் நிறுத்தப்பட்டிருந்த வைகிங் ஸ்கை என்ற சொகுசுக் கப்பல் பத்திரமாக துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வைகிங் ஸ்கை என்ற பெயர் கொண்ட சொகுசு கப்பல் 1,400 பயணிகளுடன் நோர்வேயில் இருந்து புறப்பட்ட இடத்தில் இருந்து 38 நாட் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது திடீரென வீசிய சூறாவளி காற்றிலும், பேரலையிலும் சிக்கி தள்ளாடியது.

இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மற்றும் மீன்பிடிப் படகுகள் மூலம் கப்பலில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடல் சீற்றம் குறைந்ததைத் தொடர்ந்து இழுவைக் கப்பல் மூலம் வைகிங் ஸ்கை கப்பல் மோல்டே என்ற துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அடங்கியது இரணைதீவு

முடங்கியது மஹிந்தவின் இணையத்தளம்

இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!