விளையாட்டு

14 நிமிட நேரத்தை வீணடித்த நெய்மர்

(UTV|RUSSIA)-பிரேசில் அணி நட்சத்திர வீரர் நெய்மர் மீது இந்த உலககோப்பை யில் கடும் விமர்சனம் முன் வைக்கப்படுகின்றன. அவர் ஆட்டத்தின் போது எதிரணி வீரர்கள் லேசாக உரசியவுடன் கீழே விழுந்து வலியால் துடிப்பது போல் நடிக்கிறார் என்று மெக்சிகோ பயிற்சியாளர் ஜூவான் கார்லஸ் ஒசோரியம் குற்றம் சாட்டினார்.

மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தின் போது 71-வது நிமிடத்தில் கணுக்காலில் பிடித்து கொண்டு நெய்மர் வலியால் துடித்தார். உடனே மருத்துவ குழுவினர் மைதானத்துக்குள் வந்து சிகிச்சை அளித்ததால் நேரம் விரயம் ஆனது.

இதை சுட்டி காட்டிய மெக்சி கோ பயிற்சியாளர், நெய்மரின் செயலால் கடைசி கட்டத்தில் நேரம் வீணாகி எங்கள் வீரர்கள் சோர்வடைந்து விட்டனர் என்றார்.

இதற்கிடையே சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டி.வி. நிறுவனம் ஒன்று நெய்மர் விளையாடிய 4 ஆட்டத்தையும் ஆய்வு செய்தது. இதில் நெய்மர் அடிக்கடி கீழே விழுந்து வலியால் துடித்ததில் அவர் 14 நிமிட நேரத்தை வீணடித்து உள்ளார் என்று தெரிவித்து இருக்கிறது.

ஆனால் தன் மீதுள்ள விமர்சனத்தை பற்றி நெய்மர் கவலைப்படவில்லை. அவர் கூறுகையில், விமர்சனத்தையோ, பாராட்டுகளையோ நான் கண்டு கொள்வதில்லை. எனது பணி களம் இறங்கி அணிக்காகவும், சக வீரர்களுக்காகவும் உதவுவது மட்டுமே என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டெல்லி கெப்பிட்டல்சை எதிர்க்கொண்டு வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

லீவிஸ் ஹாமில்டனுக்கு சாம்பியன் பட்டம்

நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்