உள்நாடுபிராந்தியம்

14 கோடி பெறுமதியான ஹெரோயின், ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அத்தோடு ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள், பணம் மற்றும் வாகனம் போன்றவற்றை கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (21) வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டம், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ராகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உஹனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து 8 கிலோ 168 கிராம் ஹெரோயின், 666 கிராம் ஐஸ் போதைப் பொருள், ரூபாய் 8 இலட்சத்தி 23 ஆயிரம் (823,000.00) பணம், மின்னணு தராசு 03, கையடக்கத் தொலைபேசி 04, வாகன போலி எண் தகடுகள் 06, ஒரு கார், ஒரு வேன், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது, கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்லவின் கட்டளையின் பிரகாரம், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலில், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான குழுவினர் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

மேலும் 986 பேர் கைது!

குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய விசேட குழுக்கள்

கந்தக்காடு : இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு தொற்று