உள்நாடு

14 வயது மாணவியை 02 பெண் பிள்ளைகளின் தந்தை பாலியல் துஷ்பிரயோகம்!

(UTV | கொழும்பு) –  14 வயது மாணவியை 02 பெண் பிள்ளைகளின் தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். 

கொழும்பை அண்மித்த பகுதியில் வசிக்கும் மற்றும் கொழும்பிலுள்ள அரசாங்க பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி, வீட்டில் தனியாக இருக்கும் வேளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளதாக பம்பலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பலாத்காரம் செய்ததாக கூறப்படும் நபர் 50 வயதுடையவர எனவும், 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும்,அவரது மனைவி உயிரிழந்துள்ளதுடன், தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளராக பணிபுரிபவர்என்றும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை மேற்க்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சஜித் தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித்

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்