சூடான செய்திகள் 1

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

(UTV|COLOMBO)  எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள ரம்புட்டான் தோல்

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு (AUDIO)

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென தீர்மானம்