இந்த ஆண்டின் இதுவரையான 13 நாட்களில் இடம்பெற்ற 77 பாரிய வீதி விபத்துக்களில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக நாட்டில் பல கோர விபத்துக்கள் பதிவாகி வரும் பின்னணியில், ‘அத தெரண’ BIG FOCUS நிகழ்ச்சியில் இன்று (13) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை வெளிப்படுத்தினார்.
இடம்பெற்றுள்ள விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகனம் செலுத்தியமையினால் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
