வகைப்படுத்தப்படாத

13 வயதில் தாயாகிய மாணவி; பிறந்த குழந்தை இறந்தது

(UDHAYAM, COLOMBO) – 13 வயது பாடசாலை மாணவியொருவர் அவிசாவளை மருத்துவனையில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

எனினும் இவ்வாறு பிறந்துள்ள குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், அம் மாணவி மருத்துவனையில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் குறித்த மாணவியின் நண்பியின் காதலன் என கூறுப்படும் இளைஞனால் 7 ஆம் வகுப்பில் பயிலும் இந்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த இளைஞனால் பல தடவைகள் இந்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியால் இது தொடர்பில் தெரணியாகல காவற்துறை சிறுவர் மற்றும் பெண்கள் பணிகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் உடனடியாக செயற்பட்ட அந்த பணியகத்தின் அதிகாரிகள், சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேக நபரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே குறித்த மாணவி பிரசவத்திற்காக அவிசாவளை மருத்துவமனையில் அனுமதியாகிய நிலையில், குழந்தை பிறந்து இறந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

HRW asks Govt. to end arbitrary arrests, abuses against Muslims

இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு பிடியாணை

மலேஷியப் பிரதமர் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை