உள்நாடு

13 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!

(UTV | கொழும்பு) –

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் அவசியத்தன்மைக்கு ஏற்ப எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுமுறை அளிக்கும் பாடசாலைகளின் அதிபர்கள் இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளால் பாடசாலைக்கு சோலார் மின் சக்தி திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது..!

{VIDEO} மருந்து தட்டுப்பாடு காரணமாக சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச கேள்வி

ஜோன்ஸ்டனுக்கு சரணடைய கால அவகாசம்