உள்நாடுசூடான செய்திகள் 1

13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி – விமல்

(UTV | கொழும்பு) –

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் என்று நாம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றோம்.

நாட்டில் தற்போது 13ஆவது திருத்தச் சட்ட விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கின்றது.

எனவே, அந்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்காக இந்த நாட்டைப் பிளவுபடுத்த ஒருபோதும் இடமளியோம்” என தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு

UTV மதிய நேர செய்திகள் இன்று முதல் யூடியூப் நேரலையாக

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து