சூடான செய்திகள் 1வணிகம்

06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கு புதிய வரி முறை

(UTV|COLOMBO) நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர,இறக்குமதிக்காக மார்ச் மாதம் 06ம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படுகின்ற கடன் பத்திரங்களுக்கே புதிய வரித் திருத்தம் நடைமுறைக்கு வரும் என்று  கூறியுள்ளார்.

மேலும் ,இறக்குமதி செய்யப்படுகின்ற பெற்றோல் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது வரவு செலுத் திட்ட உரையில் கூறினார்.

எவ்வாறாயினும் இந்த வரி அதிகரிப்பானது மார்ச் மாதம் 06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கப்படுகின்ற கடன் பத்திரங்களில் இருந்தே அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

இன்றைய நாணய மாற்று விகிதம்

வவுனியாவில் கடும் மழை – பாவற்குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு

editor

இரு வேறு பிரதேசங்களில் இருந்து நால்வர் கைது