சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் மேல் மாகாணத்திலும் கேகாலை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

Related posts

பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 ஆம் ஆண்டாகும் போது பசுமை இலக்குகளை அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும்

தொடர்ந்தும் பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது-சஜித்

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கைது