கேளிக்கை

வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு: பாட்ஷாவின் சாதனை

(UDHAYAM, KOLLYWOOD) – சூப்பர் ஸ்டார் ரஜினியின் 40 ஆண்டுகால திரையுலக வாழ்வில் அவருடைய மிகச்சிறந்த படம் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு குறிப்பிடும் படம் ‘பாட்ஷா’ என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அவரே பல மேடைகளில் ‘பாட்ஷா’ போன்ற இன்னொரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார் இந்நிலையில் மார்ச் 3ஆம் திகதி டிஜிட்டல் வெர்ஷனில் மீண்டும் ரிலீஸ் ஆன சூப்பர் ஸ்டாரின் ‘பாட்ஷா’ புதிய படங்களின் ஓப்பனிங் வசூலை பின்னுக்கு தள்ளி மீண்டும் வசூலை குவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த படத்தின் வசூலை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியப்பட்டுள்ளது.

சென்னையில் பாட்ஷா திரைப்படம் 14 திரையரங்க வளாகங்களில் 102 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.39,06,210 வசூல் செய்துள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் 85%க்கும் மேல் பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்றுவிட்டதாகவும், வெல்ல போவதாகவும் கூறிக்கொள்ளும் நடிகர்களுக்கு ரஜினி மட்டுமே ஒரே சூப்பர் ஸ்டார் என்பதை புரிய வைத்துள்ளது தலைவரின் இந்த டிஜிட்டல் பாட்ஷா.

Related posts

ஓமனில் கணவருடன் தேனிலவு கொண்டாடிய பிரியங்கா…

பிகில் பட பாடல்; அட்லீ திடீர் அறிவிப்பு

எதிர்காலம் தொடர்பில் இப்படி ஒரு முடிவெடுத்து விட்டாரே அமலா பால்!!