வகைப்படுத்தப்படாத

12 மாவட்டங்களில் அதிக டெங்கு தொற்று அவதானம்:நோயாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை விட அதிகம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோய் தீவிரமாக பரவிவருவது தொடர்பில் மற்றும் அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட டெங்கு தடுப்பு சிறப்பு பணிப்பிரிவை உடனே அழைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அதன்படி, ஜனாதிபதியின் தலைமையில் இன்றைய தினம் டெங்கு தடுப்பு சிறப்பு பணிப்பிரிவுடன் சிறப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

இவ் வருடத்தில் இதுவரை 44 ஆயிரத்து 623 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அதில் 115 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனுடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக டெங்கு தொற்று அவதான வலயமாக தற்போது இனங்காணப்பட்டுள்ளன.

Related posts

இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ற்கான போட்டிப்பரீட்சை

Two Chinese arrested for credit card forgery

ஹகிபிஸ் புயல் – 8 பேர் உயிரிழப்பு