சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் அமைச்சர் சஜித்துடன் அமைச்சர் ரிஷாத் பேச்சு

(UTV|COLOMBO)-கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்வது தொடர்பாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாளை மறுதினம் 28 ஆம் திகதி சந்தித்து பேசுகிறார்

இந்த விவகாரம் தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன், தொலைபேசியில் உரையாடிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மாணவர்கள் தவறுதலாக இவ்வாறான செயலை மேற்கொண்டு இருப்பதாகவும் எனவே குறித்த மாணவர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினார் அத்துடன் அனுராதபுர பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும் பேசிய அமைச்சர், இந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆவன நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்

 

 

 

 

Related posts

புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாயமாகிறது-UPDATE

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08)