சூடான செய்திகள் 1

பொலிஸ் நிலைய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து

(UTV|COLOMBO)-பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றம் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டன.

தற்போது அது பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரை மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இடமாற்றம் பெற்றவர்களுள் 27 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும் 45 பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை – சஜித் சபாநாயகரிடம் கேள்வி | வீடியோ

editor

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 480 மில்லியன் டொலர் நிதியுதவி

தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல்