சூடான செய்திகள் 1

“டுக்டுக்” முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள்

(UTV|COLOMBO)-“டுக்டுக்” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருத்தமான முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஹொட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர்கூடத்தில் இன்று இது தொடர்பாக வைபவம் இடம்பெற்றுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் 270 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு சுற்றலாப் பயணிகள் பெரும் ஆர்வம் கொண்டிருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

முடிவை மாற்றுங்கள்.” அரசுக்கு அமைச்சர் ரிஷாட் காட்டமான செய்தி!!!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள்