(UTV|COLOMBO)-சர்வதே ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை அடுத்தவருடம் மார்ச் மாத்திலிருந்து நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பயணங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு மிகவும் அவசியமான ஒரு பிறப்புச்சான்றிதழாக இது அமையும் என்று பதிவாளர் நாயகத்தின் திணைக்கள ஆணையாளர்நாயகம் என்.சி.விதான கே.தெரிவித்தார்.
மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்டத்தின் கீழ்வரும் பிரதேசசெயலகங்கள் ஊடாகவும் தற்சமயம் விநியோகிக்கப்பட்டுவரும்பிறப்புச்சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றவை அல்ல. நாடளாவியரீதியில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வகையில், பதிவாளர் ஒருவரது அல்லது ஆணையாளர் ஒருவரது கையொப்பத்துடன் புதியபிறப்புச்சான்றிதழ் விநியோகிக்கப்படவுள்ளது.
