உள்நாடு

11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும்

(UTV | கொழும்பு) – இலங்கையில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் வரை குறித்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக பதுளை, கொழும்பு, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கண்டி, கேகாலை, குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் மக்கள் திரண்டு வந்து சங்குக்கு வாக்களியுங்கள் – சி.வி. விக்னேஸ்வரன்

editor

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று

வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்