11 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேசிய விமானம் விபத்தை சந்தித்துள்ளது.
இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தால் இயக்கப்படும் ATR 42-500 என்ற சிறிய பயணிகள் விமானம் ஒன்று யோககர்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசர் நகருக்கு பறந்து கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் 3 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர்.
பறந்து சென்ற 12 மைல்களுக்குப் பிறகு மர்மமான முறையில் விமானம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, ரேடார் அமைப்புகளிலிருந்து மறைந்துவிட்டது.
காணாமல் போன விமானத்திலிருந்து கடைசி சமிக்ஞை உள்ளூர் நேரப்படி காலை 11:20 மணிக்கு கிடைத்துள்ளது.
விமானம் கடைசியாக அறியப்பட்ட இடத்திற்கு அருகில், மரோஸ் ரீஜென்சியின் மலைப்பகுதிக்கு மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன்கள் மூலம் விமானம் தேடப்பட்டு வந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் மலையின் ஒருபகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, விமானம் மாயமானதாகக் கூறப்படும் மலைப்பகுதிகளில் இருந்து கரும்புகை எழும்புவது, விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
