சூடான செய்திகள் 1

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO)-மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும் இரண்டரை மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி இந்த இந்த கால நீடிப்பை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே 2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த காலம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்தக் காலம் பெப்ரவரி 15ம் திகதிவரை மீண்டும் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு 2018 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

புதிய பிரதம நீதியரசராக ( C J) ஜயந்த ஜயசூரிய

வெலே சுதாவுக்கு எதிரன வழக்கு பிற்போடப்பட்டது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு