வகைப்படுத்தப்படாத

ஈரானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

(UTV|IRAN)-ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணம், சர்போல் இஸகாப் அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பலருக்கு லேசான காயங்களே ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் தாக்கிய இடங்களில் 6 மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

Fmr. Defence Secretary Arrested

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு