உள்நாடுகாலநிலை

100 மி.மீ க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் வணிகக் காற்றுகள் ஒடுங்கும் பிரதேசம்) நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

MV Xpress pearl கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

ஊரடங்கு உத்தரவு இல்லை, தடுப்பூசியே சிறந்த திட்டம்

PCR இயந்திரம் நாளை முதல் பரிசோதனை நடவடிக்கைக்கு