சூடான செய்திகள் 1

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது 100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொற்றா நோய்கள் அனைத்திற்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இடைக்கால பயிற்சிகளை நிறைவு செய்த பல் வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் தொடர்பில் எந்தவொரு வரையறையும் இன்றி தேவையான மருந்துகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.சுகாதாரத் துறையில் உள்ள சகல ஊழியர்களுக்கும் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பிற்கு மாத்திரம் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மிருக பலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்

ஹம்பந்தோட்டையில் யானைகள் சரணாலயம்…

தொழிற்சாலை களஞ்சியசாலையில் வெடிப்பு சம்பவம்