உள்நாடுகாலநிலை

100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யும்

இன்றைய தினம் (20) மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

74 வயதான யாழ், சிரேஷ்ட பிரஜை நற்கருமத்துக்காக நிதி திரட்ட 450 கிலோ மீற்றரை மிதி வண்டியில் பயணித்து சாதனை

editor

குருந்தூர் மலையில் சிங்கள-தமிழ் கவலரம் : எச்சரிக்கும் சரத் வீரசேகர

மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்: நிந்தவூர் பாடசாலையில் சம்பவம்!