லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பிரிவில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் முதுகுத் தண்டுவடத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பின்னால் பயணித்த அவரது நண்பர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது.