உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

(UTV | கொழும்பு) –

இஸ்ரேல் – ஹமாஸ் போர் 100 நாட்களை கடந்துள்ளதுடன், போரில் பலியான பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸா சுகாதார அமைச்சகம் இன்று(15) வெளியிட்ட குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் காஸா வைத்தியசாலைக்கு தாக்குதலில் பலியான 132 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், காஸா பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் 33 பேர் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததுடன் மேலும் 252 காயமுற்றவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போரில் ஏறத்தாழ 8 ஆயிரம் ஹமாஸ் போராளிகள் உயிரிழந்துள்ளதுடன் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 24,100 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60,834 பேர் காயமுற்றுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்தும் நீக்குவதா / நீடிப்பதா

உயர் பதவிகள் குழுவினால் 13 புதிய தூதரகங்களின் தலைவர்களுக்கு அங்கீகாரம்

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

editor