உள்நாடு

10 மணிநேர நீர்வெட்டு குறித்து கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர்வெட்டு நாளை வியாழக்கிழமை (23) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 , பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, கொலன்னாவை, தொட்டிகாவத்த, அங்கொடை,வெல்லம்பிட்டி, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

குருநாகல் மேயரை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை

சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் புதனன்று கொழும்புக்கு

இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

editor