அரசியல்உள்நாடு

10 நாட்களில் 364 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 31ஆம் திகதி வரை 364 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் 02 பதிவாகியுள்ளதாக என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 282 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 82 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கும் ராஜபக்ஷர்கள் கிளர்ச்சிக்கும் வேறுபாடு இல்லை

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிக்க இடமளிக்கப்பட மாட்டாது

போராட்டங்களே என் அரசியல் வாழ்வாக மாறிவிட்டது – ரிஷாட்