உள்நாடுபிராந்தியம்

10 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

மொரகொட பொலிஸ் பிரிவின் முரியாகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவன் நேற்று (30) மாலை ஏரியில் நீந்தச் சென்றிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளான்.

மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததாக மொரகொட பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மொரோந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு

மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரம் – அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவேண்டும் – சுமந்திரன்

editor