உள்நாடு

10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் டெங்கு அபாயம்

(UTV | கொழும்பு) –  பத்து மாவட்டங்கள் இன்னும் டெங்கு அபாயத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டங்கள் கொழும்பு, களுத்துறை, கண்டி, கம்பஹா, மாத்தளை, காலி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் கேகாலை.

இந்த மாவட்டங்களில் கடந்த வாரம் 1,152 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 59,317 ஆகும்.

Related posts

நட்டஈடு கோரும் சேதன உரம் அனுப்பிய சீன நிறுவனம்

அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி பாரிய மோசடி

editor

தடுப்பூசி : அவசர சிகிச்சைப் பிரிவுகளும் தயார் நிலையில்