உள்நாடு

10 மணிநேர நீர்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (23) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால் பாவனையாளர்கள் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

‘MT NEW DIAMOND’ – இரண்டாக உடையும் அபாயம் இல்லை

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு