கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (9) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான 10 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கோங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கோலவத்த, கொரகதெனிய, ரன்பொகுணுகம வீடமைப்பு திட்டம், படலீய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மீவிடி கம்மானய, மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவன, கலல்பிடிய, எலமுல்ல ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.