உள்நாடுசூடான செய்திகள் 1

09ஆம் திகதி புதிய அமைச்சரவை : எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சு

(UTV | கொழும்பு) –     எதிர்வரும் டிசம்பம் 09ஆம் திகதி புதிய அமைச்சரவை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

வரவு-செலவுத்திட்டம் எதிர்வரும் 08ஆம் திகதி நிறைவடைந்த கையோடு , அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவர தீர்மானித்துள்ளார். இவ் அமைச்சரவையில் எதிர்க்கட்சியின் 02 முக்கிய புள்ளிகளுக்கு அமைச்சை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

மேலும், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சு பொறுப்புக்களை வழங்குவது குறித்து அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பேசி தீர்மானமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி ஆயத்தமாக வருவதாக தமிழ் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 

இச்செய்தியை பகிருங்கள்
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு!

editor

இலங்கையில் முதற்தடவையாக பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம்

ஸஹ்ரானுடனான காணொளி; ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயார் – ஹக்கீம்