உள்நாடு

07 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (14) வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் இன்று மாலை 4 மணிக்கு விடுத்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கண்டி மாவட்டத்துக்கும், குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த அபாய எச்சரிக்கையானது, நாளை மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கு விசேட அறிக்கை

editor

கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

பிரதான ரயில் பாதையில் தாமதம்