உள்நாடு

04 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கண்டி மாவட்டத்தின் ஹதரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பாதஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரளை, தெல்தொட்ட, பூஜாப்பிட்டிய, கங்க இஹல கோரளை, பன்வில, கங்கவட்ட கோரளை, உடபலாத, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிபே, தொழுவ, தும்பனே, அக்குரணை, உடுநுவர மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கேகாலை மாவட்டத்தின் கேகாலை, கலிகமுவ, மாவனல்லை, புளத்கொஹுபிட்டிய, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ரம்புக்கனை மற்றும் வரகாபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம, மல்லவப்பிட்டிய மற்றும் ரிதீகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பங்கங்க கோரளை, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை மற்றும் யட்டவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்கள் மீது அதிக சுமையை ஏற்றும் வகையில் வரி மசோதா கொண்டு வரப் போகிறார்கள்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் சவ்ச் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும் –ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

ஹமாஸின், இலங்கை பணயக்கைதி பலி!