உள்நாடுபிராந்தியம்

ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி

ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் நேற்று (08) மாலை பதிவாகியதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இம்புல்தென்ன பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஆவார். 

விசாரணையில் சிறுவன் தனது பெற்றோருடன் ஹோட்டலுக்கு வந்ததாகவும், தனது நண்பர்களுடன் நீச்சல் தடாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்ததாகவும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஓபநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முதல் வெற்றி கொழும்பு கிங்ஸ் அணிக்கு

போலி நாணயத்தாளுடன் இருவர் கைது!

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

editor