வகைப்படுத்தப்படாத

ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுப்பு

(UTV|HONG KONG)  ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதுடன் இந்த வகையில் ஹொங்கொங் தலைநகரில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாத்திரம் சுமார் 3 லட்சத்து 38 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டதாக அந்த பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கைதிகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பான சர்ச்சைக்குரிய சட்ட வரைவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹொங்கொங்கின் நிர்வாக தலைவர் கேரி லாம் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார்.

இந்த சட்டவரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மக்கள் தெளிவின்மையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அது சட்டவரைவு உத்தியோகபூர்வமாக மீள பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக அந்த நாட்டின் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related posts

இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம் இன்று..

சிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு வீச்சு- 21 பேர் பலி

Met. predicts spells of showers today