வகைப்படுத்தப்படாத

ஹொங்கொங்கில் இரண்டாவது நாளாகவும் விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலினால், இரண்டாவது நாளாகவும் விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தினால் ஹொங்கொங் விமான நிலையம் நேற்று முன்தினம் மூடப்பட்டு நேற்று மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், சில ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்திற்குள் இருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், விமான நிலையத்தின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அனைத்து விமானங்களையும் இரத்து செய்வதாக ஹொங்கொங் விமான நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலையில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறியதையடுத்து பலத்த பாதுகாப்புடன் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

லிபியா சிறை மோதல் – 39 பேர் பலி

இலங்கை – இந்தோனேஷியா மூன்று புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

Thehan and Oneli bag U16 single titles