வகைப்படுத்தப்படாத

ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது

(UDHAYAM, COLOMBO) – விற்பனைக்காக ஹெரோயின்  போதைபொருள் வைத்திருந்த மூவரை ஹட்டன் குடாகம மதுவரி தினைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த இருவரும் குடாகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே 01.06.2017 மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சோதனையிட்டபோதே  பொதிசெய்யப்பட்ட 9 பக்கட்டுகளில்   2200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது

கைது செய்யப்பட்ட மூவரில் இருவரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்திலும் மேலும் ஒருவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றிலும் ஆஜர்படுத்தவுள்ளதாக  தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

AG informs Acting IGP to arrest 8 accused in Avant-Garde case

அனைத்து அரச ஊழியர்களும் அபிவிருத்தியின் முன்னோடிகளாக மாற வேண்டும் – ஜனாதிபதி

புயல் தாக்கியதால் 30 பேர் பலி