சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)  11 கிராமும் 550 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஜாஎல களு பாலத்திற்கு அருகில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று(12) வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Related posts

வவுனியா சிறையில் இருந்து சிறைக்கைதி தப்பியோட்டம்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தால் முக்கிய செய்தி..!

போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் தரம் பற்றி ஜனாதிபதி பணிப்புரை